சென்னை கபாலீஸ்வரர் ஆலயத்தில்  ஏப்ரல் 3-ஆம் தேதி கும்பாபிஷேகம்

ஆன்மீகம்
Typography

சென்னை, ஏப்ரல் 3- மயிலையில் கையிலை, கையிலையில் மையிலை எனப் போற்றப்படுவது சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் ஆலயம். 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த கபாலீஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.  இதனையொட்டி 9 கோடி ரூபாய் செலவில் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

 சேதமடைந்த 17 விமானங்கள், பெரிய தேர், சிறிய தேர்கள், அனைத்து மர வாகனங்கள்,  அறுபத்து மூவர் பல்லக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளன.  ராஜகோபுரத்திற்கு வர்ணம் பூசும் பணியும், விமானக் கலசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணியும் நடந்து முடிந்துள்ளன.  

கும்பாபிஷேகத்தை காண ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, பாதுகாப்பு, மருத்துவ உதவி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படும்.அதேபோல், வரும், 28ம் தேதி முதல் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக தீயணைப்பு நிலையமும் அமைக்கப்படும். கும்பாபிஷேகம், தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.கும்பாபிஷேகம் நடக்க உள்ளதை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் பிரம்மாண்டமாக யாக சாலை போடப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS