சர்க்கரை வள்ளிக் கிழங்கை ஓரங்கட்டாதீர்கள்!

சுகாதாரம்
Typography

சென்னை, ஜூலை 29- இனிப்பு சுவைமிகுந்த பொருள்கள் என்றாலே ஒதுக்கி வைத்து விடுபவர்கள் நம்மில் அதிகம். ஆனால் அதற்காக சர்க்கரை வள்ளிக் கிழங்கையும் சாப்பிடாமல் ஒதுக்கி வைத்து விடாதீர்கள்.

அதனால் கிடைக்கும் நன்மை என்ன என்பதை முதலில் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள சத்துக்கள்: நூறு கிராம் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் 70-90 விழுக்காடு கலோரி ஆற்றல், குறைந்த அளவிலான கொழுப்புச் சத்து, நார்ச்சத்து நோய் எதிர்ப்புத் தன்மைகள்,  விட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு எடையை அதிகரிக்குமா?: சரக்கரை  வள்ளிக்கிழங்கில்   நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இது வயிறு நிரம்புவது போன்ற உணர்வு, செரிமானப் பிரச்சினை ஆகியவற்றை தடுத்து உடலில் கொழுப்புச் சத்தை சேர்க்கத் தூண்டும். இன்சுலின் சுரப்பையும் தடுக்கிறது. அதனால் இந்த இந்தக் கிழங்கு உடல் எடையை அதிகரிக்கச் செய்யாது.

சர்க்கரை வள்ளிக் கிழங்கின் நன்மைகள்: இரத்த அழுத்தத்தை சீராக்கி இரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது. இந்த கிழங்கில் அதிகளவு பீட்டா கரோட்டின் உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சத்தையை அதிகரித்து சரும ஆரோக்கியம் தோல் மற்றும் நரம்பு மண்டல செயல்பாடு ஆகியவற்றிற்கு உதவுகிறது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கின் இலை விஷக்கடிக்கு மருந்தாகிறது. எனவே இதன் இலையை பச்சையாக அரைத்து பூச்சிக் கடிவாயில் வைத்து கட்டுவதால் விஷம் முறிந்து வலி வீக்கம் குறையும்.

தோலில் ஏற்படும் ஒவ்வாமை, அரிப்பு பிரச்சினைக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்து அதனோடு 3 மடங்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து பசை போலச் செய்து அதை அரிப்பு உள்ள இடத்தில் தடவினால் குணமாகும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS