4 மாதங்களில் 1,016 பேரை நாய் கடித்தது!! சரவாவில் தடுப்பூசிப் பணிகள் தீவிரம்!

சுகாதாரம்
Typography

 

கூச்சிங். ஜூலை.28– சரவா மாநிலத்தில், புதிதாக 56 நாய்க் கடிச் சம்பவங்கள் சரவாக்கில் பதிவாகியுள்ளன. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 27-ஆம் தேதி வரையில் சுமார் 1,016 நாய்க் கடிச் சம்பவங்கள் நடந்துள்ளன என்று சரவா சுகாதார துறை தெரிவித்தது.

செரியான் மாவட்டத்தில் 14 நாய்க் கடிச் சம்பவங்களும் கூச்சிங்கில் 38 நாய்க் கடிச் சம்பவங்களும் ஶ்ரீசமராஹானில் 2 நாய்க் கடிச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 

சுகாதாரத் துறையின் நோய் கண்டறிவு குழுவும் மற்றும் சரவா மாநிலத்தின் பேரிடர் நிர்வாக குழுவும் இணைந்து இந்த 'ரேபிஸ்' நோயைக் கட்டுப்படுத்த சுகாதார முகாம்களை தொடங்கியுள்ளனர். 

மேலும், 41 நாய்க் கடிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேற்று 'ரேபிஸ்' நோய் தடுப்பூசி போடப்பட்டது என்று பேரிடர் நிர்வாகக் குழு கூறியது. இந்த ரேபிஸ் நோயால் இதுவரை நான்கு சிறுவர்கள் மற்றும் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS