ஜொகூரில் டெங்கி காய்ச்சல்: 14 பேர் மரணம்!

சுகாதாரம்
Typography

ஜொகூர் பாரு, ஜூலை.24- இம்மாதம் 22-ஆம் தேதி வரையில் ஜொகூரில்  டெங்கி காய்ச்சல் அதிகரித்து வரும் வேளையில், இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 8 முதல் 67 வயது வரையிலானவர்கள் இந்த டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில சுகாதார, சுற்றுச்சூழல், கல்வி மற்றும் தகவல்  துறை ஆட்சிக்குழுத் தலைவர் டத்தோ அயூப் ரஹ்மாட் கூறினார்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை ஜொகூரில் மொத்தம் 4,526 டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு 7,949 சம்பவங்கள் பதிவாகினது. 

எனினும், கூலாய் (8.96 விழுக்காடு), கோத்தா திங்கி (4.7 விழுக்காடு), குளுவாங் (3.3 விழுக்காடு), மூவார் (1.9 விழுக்காடு), மெர்சிங் (0.94 விழுக்காடு) மற்றும் பத்து பகாட் (0.47 விழுக்காடு) ஆகிய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் ஜொகூர் பாருவில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள்  79.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

மேலும், தங்காக், சிகாமாட் மற்றும் பொந்தியான் ஆகிய பகுதிகளில் எந்த டெங்கி காய்ச்சல் சம்பவங்களும் பதிவாகவில்லை.

ஜொகூரில் மொத்தம் 22 பகுதிகள் டெங்கி காய்ச்சல் பரவும் இடங்களாக  அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றும் 20 இடங்கள் ஜொகூர் பாருவிலும் மீதி இரு இடங்கள் மூவார் மற்றும் கூலாய் பகுதிகளிலும் அமைந்துள்ளன என்று அயூப் தெரிவித்தார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS