மத்தாங் துணை மாவட்டம் வெறிநாய்க் கிருமி பரவும் பகுதியாக  பிரகடனம்!

சுகாதாரம்
Typography

 

ஈப்போ, ஜூலை.17- பேரா அரசாங்கம் திங்கட்கிழமை தொடங்கி மாத்தாங் துணை மாவட்டத்தை வெறி நாய்க்கடி நோய்க் கிருமிகள்  பரவும் பகுதியாகப் பிரகடனப் படுத்தியுள்ளதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர் தெரிவித்தார்.

வெறி நாய்க்கடி நோய் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பிரகடனத்த்தில் கையெழுத்திட்ட போது டாக்டர் ஜம்ரி கூறினார்.

பேரா மாநிலத்தில் இதுவரை ஒரு சம்பவம் மட்டுமே பதிவாகி உள்ளது. இருப்பினும் இந்த நோயைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவிருக்கின்றன. மாத்தாங் துணை மாவட்டத்தில் குடியிருப்பவர்கள் தங்கள் நாய்களை வெளியே அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் செய்தியாளர்களிடம் சொன்னார். 

அண்மையில் கோல செபாத்தாங்கில் வெறிநாய்க் கடிக் நோயால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று, இரு சிறுமிகளை தாக்கியது. இந்தச் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து 1 கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து வளர்ப்பு பிராணிகளுக்கும் நோய் தடுப்பூசி போடப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS