சர்க்கரை நோய் பிரச்சனைக்கு வரப்பிரசாதம் கோதுமை..!

சுகாதாரம்
Typography

தானிய வகைகளில் ஒன்றான கோதுமை உலகில் மற்றப் பயிர்களைக் காட்டிலும் அதிகமாக பயிரிடப்படுகிறது. பஞ்சாபிகளின் முதன்மை உணவாகவும் கோதுமை இருக்கிறது. கோதுமை ஊட்டச்சத்துகள் நிறைந்தது; நோய்களைக் குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

சர்க்கரை நோய் இன்று பெரும்பாலானவரைத் தாக்கி வருகிறது. கோதுமை அதற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. அதிலும் குறிப்பாக சம்பா கோதுமை சர்க்கரையின் அளவைக் கணிசமாகக் குறைப்பதுடன் மொத்தக் கொழுப்புச்சத்து மற்றும் டிரைகிளைசிரைட் (Triglyceride) அளவையும் குறைக்கிறது. ஆகவேதான் நம் வைத்தியர்கள் இதை ஒரு மருந்தாகக் கருதுகிறார்கள். சம்பா கோதுமையில் அதிக நார்ச்சத்தும் உயிர்ச்சத்தும் நிறைந்திருக்கின்றன.

முதுகுவலியும் மூட்டுவலியும் பலரைப் பாடாய்ப்படுத்தி வருகிறது. இந்த பிரச்சனைக்குக் கோதுமையை வறுத்து, பொடியாக்கி அதனுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும். கோதுமை, உளுந்து, கஸ்தூரி மஞ்சளைப் பொடியாக்கி வெந்நீர்விட்டுக் கலந்து, மூட்டுவலி உள்ள இடங்களில் பூசி வந்தாலும் நிவாரணம் கிடைக்கும்.

மேலும், குறைந்த கலோரி இருப்பது இதன் கூடுதல் சிறப்பு. இதனால் கோதுமை ரவையைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களின் உடல் எடை கணிசமாகக் குறையும். அதேநேரத்தில் உடல் ஆரோக்கியம் மேம்படும்.  

கோதுமை மாவில் செய்த உணவுகளை உண்டு வந்தால், உடல் பலம் பெறும்; ஆண்மை அதிகரிக்கும். தீப்பட்ட இடங்கள், தோல் உரிந்த இடங்கள் போன்றவற்றில் இதன் மாவை நேரடியாகவோ, வெண்ணெய் சேர்த்தோ பூசினால் எரிச்சல் தணியும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS