5 எம்பையர் விருதுகளை அள்ளிய ஸ்டார் வார்ஸ்

உலகச் சினிமா
Typography

லன்டன்,21 மார்ச்-உலக ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை உச்சக்கட்டத்திற்கு எட்ட வைத்த ஒரு திரைப்படம் தான் “ஸ்டார் வார்ஸ்”. 2015 ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட “ஸ்டார் வார்ஸ்: தி போர்ஸ் அவேகன்ஸ்” படம் உலக அளவில் சாதனை படைத்தது. இந்த படம் வசூலையும் விருதுகளையும் வாரி குவித்த படமும் கூட.. அந்த வகையில் சமீபத்தில் லண்டனில் நடந்த 2016 ம் ஆண்டு “எம்பையர் விருது” வழங்கும் விழாவில் 5 விருதுகளைப் பெற்றுள்ளது.

“ஸ்டார் வார்ஸ்:தி போர்ஸ் அவேகன்ஸ்” திரைப்படம், சிறந்த கலைவடிவம், சிறந்த விஷுவல் எபக்ட்ஸ்,சிறந்த இயக்குநர், சிறந்த அறிமுக நடிகர்கள் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகளை வாரி குவித்தது.

சிறந்த படத்திற்கான  விருதை லியோனர்டோ டி காப்ரியோ நடித்த “தி ரிவினன்ட்” தட்டி சென்றது.இதை தொடர்ந்து “மேட் மேக்ஸ்:பரி ரோட்” திரைப்படம் சிறந்த ஒப்பனை,சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த இசைத்தொகுப்பு, சிறந்த தயாரிப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளில் விருது பெற்றுள்ளது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS