குளுவாங், மார்ச் 18:- ஓரின சேர்க்கைக் காட்சியை நீக்கி விட்டு பியூட்டி அன் பீஸ்ட் படத்தைத் திரையிடலாம் என்று உள்துறை துணை அமைச்சர் வால்ட் டிஸ்னி நிறுவனத்திடம்அறிவுறுத்தியிள்ளார்.

டிஸ்னி, மலேசிய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு ஏற்ப ஓரின சேர்க்கைக் காட்சியைநீக்கிவிட்டால் மட்டுமே இந்த படத்தைத் திரையிட டிஸ்னிக்கு அனுமதி வழங்கப்படும் என உள்துறை துணை அமைச்சர் டத்தோ நூர் ஜஸ்லான் முகமது கூறினார்.

டிஸ்னி படத்தில் ஒரு காட்சியை நீக்க வேண்டும் என உள்துறை அமைச்சு ஒரு முறையீட்டு தாக்கலை வியாழக்கிழமை அறிவித்தது. இந்தப் படத்தில் உள்ள ஓரின சேர்க்கைக் காட்சியைநீக்கினால் மட்டுமே மலேசியாவில் திரையிட முடியும் எனப் படத் தணிக்கை வாரிய தலைவர் டத்தோ அப்துல் ஹலிம் அப்துல் ஹமீத் மற்றும் அமைச்சரவையும் முடிவெடுத்துள்ளனர்

கோலாலம்பூர், மார்ச் 14- ஆங்கில பட விரும்பிகள் இவ்வாண்டு அதிகம் எதிர்ப்பார்த்த படம் பியூட்டி அண்ட் தே பீஸ்ட். இப்படத்தை மலேசியாவில் திரையிட தணிக்கை வாரியம் அனுமதி அளித்து விட்டாலும் படம் எப்போது திரைக்கு வரும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

நடிகை எம்மா வாட்சன் நடிப்பில் வெளிவரவிருக்கும் இப்படம் முன்னதாக இம்மாதம் 16ம் தேதி திரைக் காணும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை வாரியத்திடம் சென்ற இப்படத்தை வாரியக் குழு மலேசியாவில் திரையிடுவதற்கு தடை விதித்தது. 

இதற்கு படத்தில் ஓரினக்காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக காரணம் கூறியது வாரியம். ஆயினும், வாரிய உறுப்பினர்கள் கலந்தாலோசித்து படத்தில் இடம்பெறும் சம்பந்தப்பட்ட சர்ச்சைகுரிய காட்சியினை நீக்கி விட்டு படத்தை திரையிடலாம் என நேற்று கூறியது. 

இந்நிலையில், வாரியம் பச்சை கொடி காட்டிவிட்டாலும் மலேசியாவில் படம் எப்போது வெளிவரும் என்ற கேள்வி குறி எழுந்துள்ளது. இது தொடர்பாக கருத்துரைத்த தணிக்கை வாரியத்தின் தலைவர் டத்தோ அப்துல் ஹலிம், "தணிக்கை செய்வது மட்டுமே எங்களின் பணி. படத்தின் கதையையும் அதன் காட்சிகளையும் கண்டு அந்த படம் மலேசியாவில் வெளியிடலாமா என்று முடிவு செய்வது மட்டுமே எங்களின் வேலை. வெளியீட்டு தேதியை நிர்ணயிப்பது நாங்கள் அல்ல" என்று கூறினார். 

மலேசியாவில் மட்டுமின்றி, சிங்கப்பூர், ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் உள்ள அலபாமாவிலும் ஓரினக் காட்சியினால் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 லாஸ் ஏஞ்சலிஸ், மார்ச்.11- கடந்த 2009ஆம் ஆண்டில் வெளிவந்து உலகத் திரைப்பட ரசிகர்களை அசத்திய ஆங்கிலத் திரைப்படமான 'அவதார்' படத்தின் இரண்டாம் பாகம் இப்போது வெளிவராது என அதன் இயக்குனர் அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அவதார் படம் நான்கு பாகங்கள் வெளிவரவிருப்பதாக அதன் இயக்குனர் ஜேம்ஸ் கெமரூன் முன்பே அறிவித்துள்ளார்.

அதன் இரண்டாம் பாகம் இவ்வாண்டில் வெளிவரும் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் 201ந்ஆம் ஆண்டில் கூட அது வெளிவரும் சாத்தியம் இல்லை என்று ஜேம்ஸ் கெமரூன் இப்போது அறிவித்திருக்கிறார்.

2009ஆம் ஆண்டில் வெளிவந்த அவதார் திரைப்படம், உலகளாவிய அளவில் ரசிகர்களை ஈர்த்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.  'டைட்டானிக்' உள்ளிட்ட வசூல் வரலாற்றில் இடம் பிடித்திருந்த பல படங்களின் சாதனைகளை இது முறியடித்தது கிட்டத்தட்ட 280 கோடி டாலர் வரை வசூலை வாரிச் சுருட்டியது.

இதன் காரணமாக அவதார்Avatar 2 மேலும் நான்கு பாகங்கள் வெளிவரும் என்று இயக்குனர் ஜேம்ஸ் கெமரூன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டில் கூட வெளிவர வாய்ப்பில்லை என்று அவர் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

லாஸ் ஏஞ்சல்ஸ், பிப்.27- ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த படத்திற்கான விருதினை அறிவிக்கும் போது தவறு நிகழ்ந்தது. வெற்றி பெற்ற படத்திற்கு பதிலாக வேறு ஒரு படம் தவறாக அறிவிக்கப்பட்டது.

இன்று நடந்த ஆஸ்கார் விருது விழாவில் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த தருணம் சிறந்த படம் எது என்பது தான். பட்டியலில் நிறைய படங்கள் இருந்தாலும் மூன்லைட் மற்றும் லா லா லேண்ட் ஆகிய படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. 

அனைவரும் ஆவலோடு காத்திருக்க சிறந்த படத்திற்கான விருதினை பெறும் படம் எனக் கூறி, லா லா லேண்ட் படத்தலைப்பு அறிவிக்கப்பட்டது. படக்குழுவினரும் ரசிகர்களும் ஆரவாரத்தோடு கைத்தட்ட மேடையில் படக்குழுவினருக்கு விருது வழங்கப்பட்டது. விருது பெற்றவர்கள் மேடையில் மகிழ்ச்சி பொங்க உரை நிகழ்த்தி கொண்டிருந்தனர்.

ஆனால், திடீரென மேடையில் ஏறிய அதிகாரிகள் லா லா லேண்ட் குழுவிடம் ஏதோ பேச, உடனே லா லா லேண்ட் படத்தின் தயாரிப்பாளர் மைக் பிடித்து, சிறந்த படமாக தேர்வுச் செய்யப்பட்டது 'மூன்லைட்' படம் தான் என கூறினார்.

என்ன நடக்கிறது என ஒருகணம் எல்லோரும் திகைக்க, சிறந்த படத்திற்கான தலைப்பு இருந்த அட்டை மாறி போனதாக விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சிறந்த படமாக மூன்லைட் அறிவிக்கப்பட்டது.

 

காணொளி: நன்றி ஒன்லைன்டிரண்ட்ஸ் எச்டி

More Articles ...

Page 1 of 5