ரூ.1000 கோடியில் மகாபாரதம் படம்! ஒரே படத்தில் ரஜினி, கமல், அமிதாப்பச்சன்?

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஏப்ரல் 18- புத்தகத்தில் படித்த மகாபாரதத்தை சின்ன திரை காட்டிய விதம், அனைவரும் அதிசயித்து நிற்க, அதனை விட பிரமாண்டமாய் படமாக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. 

பாகுபலி படம் புராண கால அமைப்பைக் கொண்டு வெளிவந்தப்போது அதனை ரசிக்காதவர்களே கிடையாது எனலாம். அதன் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி வெளிவரவிருக்கும் நிலையில், இயக்குனர் ராஜமௌளி அடுத்து மகாபாரதத்தை எடுக்கவிருப்பதாக செய்தி வெளியாகியது.

ஆனால், யு.ஏ.இ எக்ஸ்சேன்ஞ் எனும் நிறுவனம் மகாபாரத கதையை ரூ.1000 கோடி செலவில் படமாக்கவிருப்பதாக கூறியுள்ளது. இரண்டு ஆண்டுக்கு முன்னமே இதற்கான வேலைகள் தொடங்கி விட்டதாகவும் மலையாள இயக்குனர் வி.ஏ.ஶ்ரீகுமார் இயக்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

அப்படி எதற்காக ரூ.1000 கோடி செலவு? இந்திய அளவில் மிக பிரபலமான நடிகர்கள் அனைவரையும் இப்படத்தில் கூட்டணி சேர்க்க தான் இந்த செலவாம். குறிப்பாக, மோகன்லால் இப்படத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகி விட்ட நிலையில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா கிருஷ்ணராகவும், கமல்ஹாசன் தர்மராகவும் மோகன்லால் அர்ஜுனராகவும் அமிதாப்பச்சன் வஷிட்டராகவும் முக்கியமாக சூப்பர்ஸ்டார் ரஜினியை கர்ணனாகவும் நடிக்க வைக்க பேச்சுவர்த்தை நடந்து வருவதாக சினிமா வட்டாரம் கூறுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS