இரட்டை நாயகிகளுடன் நடிக்கிறார் சரவணனா ஸ்டோர்ஸ் உரிமையாளர்!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஏப்ரல்.16- தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சரவணனா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், இரட்டைக் கதாநாயகிகளான ஹன்சிகா மற்றும் தமன்னா ஆகியோருடன் படத்தில் நடிப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கோலிவுட்டின் புகழ்பெற்ற நாயகிகளுடன் அவர் நடிக்கும் அறிவிப்பு, ரசிகர்களுக்கு முதலில் அதிர்ச்சியை அளித்தது என்றாலும் சரவணனா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்களில் பிரபலங்கள் நடிப்பது ஒன்றும் புதிதல்ல என அறிந்து ரசிகர்கள் கொஞ்சம் சமாதானப படுத்திக்கொண்டனர்.

இந்த விளம்பரப் படத்தில் உரிமையாளர் சரவரணன் நடித்ததோடு மட்டுமல்லாமல், நடனம் ஆடவும் அவர் முயற்சி செய்துள்ளார். மேலும், தனது ஹேர் ஸ்டைலை மாற்றி தனியாக ஒரு விளம்பரப் படத்தில் தோன்றி நடித்து இருக்கிறார்.

இரட்டை நாயகிகளுடன் தோன்றினால், அது விளம்பரப் படமாகவே இருந்தாலும் ரசிகர்கள் விட்டு விடுவார்களா என்ன? சமூக வலைத்தளங்களில் புதிய ஹீரோவான சரவணனை நமது வலைத்தள வாசிகள் எக்கச் சக்கமாக கலாய்த்த வண்னம் உள்ளனர்.

"கடன் வாங்கியாவது உங்களின் கடையில் துணி வாங்குகிறேனய்யா.., தயவு செய்து படத்தில் நடிப்பதை மட்டும் விட்டு விடுங்களய்யா.." என்று ஒரு வலைவாசி மன்றாடி இருக்கிறார்.

விளம்பரப் படத்தில் சரவணன் நடித்திருப்பதைப் பார்த்த சிலர், "அவர் உழைப்பால் உயர்ந்தவர். அவருடைய கடையை விளம்பரப்படுத்த அவரின் விளம்பரப் படத்தில் நடிப்பதில் என்ன தவறு?" என்று அவருக்காக குரல் கொடுத்திருக்கின்றனர்.

திருச்செந்தூரில் முருகனின் தரிசனத்திற்காக வந்திருந்த சரவணன், நிருபர்களைச் சந்தித்த போது "நான் விரைவில் படத்தில் நடிக்கப் போகிறேன் கதாநாயகி நயன்தாரா தான்..." என்று சொல்லி நிருபர்களை அசத்தலில் விட்டுச் சென்றார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS