சொன்னா நம்புங்க! விஜய் சேதுபதிக்கு ஜோடி எமி ஜாக்சன்!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஏப்ரல் 10- "உடம்புல மச்சம் இருக்கலாம். ஆனா எனக்கு உடம்பே மச்சம் தான்".. இது வடிவேலுவின் வசனம். ஆனால் இந்த வசனம் விஜய் சேதுபதிக்கு தான் பொருந்தும்போல. விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடி யார் தெரியுமா? விக்ரமின் நாயகி எமி ஜாக்சன் தான்.

‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க சம்மதித்துள்ளார். இப்படத்தின் பெயர் ‘கஞ்சன் ஜங்கா’ என்று பெயர் வைக்கப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. 

படத்தில் அவருடைய பெயர் ஜங்காவாம். படத்தில்  மகா கஞ்சனாக  இவருடைய கதாபாத்திரம் அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஐரோப்பாவில் நடத்தவுள்ளது. இதுகுறித்து மேலும் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய முதன்மை நடிகர்களுடனேயே எமி ஜாக்சன் இன்னும் நடிக்காத நிலையில் வளரும் நடிகர் விஜய் சேதுபதியுடன் எமி சேர்வது பலருக்கு வயிற்றெரிச்சலைக் கிளம்பும் என்கிறது சினிமா வட்டாரம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS