ஆபாசப் படங்களில் கேரள நடிகைகள் முகங்கள்! -ஜோதி கிருஷ்ணா கண்டனம்!

இந்தியச் சினிமா
Typography

திருவனந்தபுரம், மார்ச் 21- பிறருடைய நிர்வாண உடலில் தம்முடைய முகத்தை, போட்டோஷாப் தொழில்நுட்பத்தில் போலியாகப் பதிவுசெய்து, வெளியிட்டுள்ள செயலைப் பிரபல மலையாள நடிகை ஜோதி கிருஷ்ணா கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.

தம்மைப் போலவே பல நடிகைகளின் முகங்கள் இத்தகைய வழிமுறைகளில் ஆபாசப் படங்களில் பயன்படுத்தப் பட்டியிருப்பது குறித்து தாம் பெரி தும் எரிச்சல் அடைவதாக அவர் சொன்னார்.

ஆண்டுக்கு 200 திரைப்படங்கள் கேரளாவில் இருந்து வெளியாகின்றன. கேரளத் திரையுலகில் பிரபலமாக விளங்கும்  நடிகைகளில் ஜோதி கிருஷ் ணாவும் ஒருவர் என்பதால் ஆபாசப் படத்தில் அவரது முகம்  என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோஷாப் தொழில்நுட்பத்தில்  மற்றொருவரின் நிர்வாண உடலுடன் நடிகைகளின் முகத்தை இணைத்து வெளியிடுவதில் அதிகமான கேரள ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தம்முடைய பேஷ்புக் பதிவில் ஜோதி கிருஷ்ணா கடுமையாக சாடியிருக்கிறார்.

இவ்விகாரம் குறித்து  பேஷ்புக்கில்  தமது கருத்தை வெளியிட்டதற்குக் காரணம்,  இதர சமூக வலைத் தளங்களில், இத்தகையோரின் செயல்களால், பாதிக்கப்பட்டவர்களின் மனவலிமையை கூட்டுவதற்காகத் தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சனை கேரளாவில் மட்டுமே இருப்பதாகக் கருத முடியாது. இந்தப் பிராந்தியம் முழுவதும் இத்தகைய ஆபாசப்படங்களில் முகம் ஒட்டும் செயல் நடந்து வருகிறது. உண்மையில் இது மோசமான அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறது என்றார் அவர். இது குறித்து ஜோதி கிருஷ்ணா போலீசில் புகார் செய்துள்ளார்.

அண்மையில், மற்றொரு மலையாள நடிகையான ஆஷாசரத் என்பவர் தொடர்பாகப் போலி வீடியோவை பதிவேற்றம் செய்ததற்காக 2 இளைஞர்கள் மீது இணையக் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS