முகமூடி அணிந்து பழனிமுருகனை தரிசித்த நடிகர் விஜய் 

இந்தியச் சினிமா
Typography

சென்னை, பிப்ரவரி 17- நடிகர் விஜய் முகமூடி அணிந்தவாறு பழனி முருகனை தரிசனம் செய்வதாக வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அண்மையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, இளைஞர்கள்,  மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, விஜய் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் வந்து கலந்து விட்டுச் சென்றார். 

இந்நிலையில், தற்போது பழனி கோயிலுக்கு முகத்தில் துணியைக் கட்டியவாறு சென்று தரிசனம் செய்து வந்துள்ளார்.  நடிகர் விஜய் முகத்தில் காவித் துண்டால்  கட்டிக்கொண்டு நடந்து செல்லும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சியாக இருக்கலாம் என கூற்றையும் படக்குழுவினர் மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS