தனுஷ் யாருடைய மகன்? அசல் ஆவணங்கள் வேண்டும்- உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்தியச் சினிமா
Typography

மதுரை, பிப்.16- நடிகர் தனுஷ் யாருடைய மகன் என்ற வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட பள்ளி சான்றிதழ்களின் அசலைக் கொண்டு வரும்படி மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவால் இவ்வழக்கு சூடுப்பிடித்துள்ளது.

தமிழ்த்திரையுலகில்  முன்னணி நடிகராகத் திகழும்  நடிகர் தனுஷ் தங்கள்  மகன்  என மேலுரைச் சேர்ந்த தம்பதிகள்  உரிமை கோரி வருகின்றனர்.  கலையரசன், மீனாள் தம்பதிக்கு கடந்த  1985-ஆம் ஆண்டு தனுஷ் பிறந்தார் என்றும், இவருடைய உண்மையான பெயர் கலையரசன் என்றும் இத்தம்பதிகள் கூறி வருகின்றனர். 

கடந்த 2002-ஆம் ஆண்டு,  தங்கள் மகன் 11-ஆம் வகுப்பு படிக்கும் போது, படிக்க பிடிக்கவில்லை என பிரிந்து சென்றுவிட்டான். அதன் பிறகு தனுஷ் என பெயரை மாற்றி நடிகராக மாறிவிட்டதாகவும்,  அதன் பிறகு தங்களை வந்து பார்க்கவில்லை என்றும் சிவகங்கை,  போக்குவரத்து பனிமனையில்    டைம் கீப்பராக வேலை செய்யும் கதிரேசன் கூறுகிறார்.

இந்நிலையில், வழக்கு விசாரணையின்போது தனுஷ் படித்த பள்ளி சான்றிதழ்கள், மாற்று சான்றிதழ்கள், வருகை பதிவேடு ஆகிய ஆவணங்களின் நகல்களை இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழங்கப்பட்ட நகல் ஆவணங்கள் வேண்டாம் அதன் அசலை நீதிமன்றத்தில் சமர்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்த வழக்கு விசாரணை சூடுப்பிடித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS