'சிங்கத்தின்' வெற்றிக்கு பரிசு; ஹரிக்கு கார் கொடுத்த சூர்யா

இந்தியச் சினிமா
Typography

சென்னை, பிப்.15- சூர்யா நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் சிங்கம் 3. இந்த ஒரு வார காலத்தில் இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதாக கூறி நடிகர் சூர்யா இயக்குனர் ஹரிக்கு கார் ஒன்றினை பரிசாக வழங்கியுள்ளார்.

சூர்யா- ஹரி கூட்டணியில் ஏற்கனவே சிங்கம் மற்றும் சிங்கம் 2 ஆகிய படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இக்கூட்டணி மீண்டும் இணைந்து சி3 படத்தை வெளியிட்டனர். தமிழகத்தில் அரசியல் குழப்பங்கள் நீடித்தாலும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

அதோடு, இந்தியாவைத் தாண்டி மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இப்படம் நல்ல வசூலைப் பெற்றது. கடந்த 6 நாட்களில் ரூ.100 கோடி வசூலை சிங்கம் 3 பெற்றதாக சினிமா வட்டாரம் கூறியுள்ளது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் படத்தின் இயக்குனர் ஹரிக்கு நாயகன் சூர்யா டோயோட்டா ஃபோர்ச்சுனர் ரக காரை வழங்கியுள்ளார். பரிசுனைக் கண்டு இயக்குனர் ஹரி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாராம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS