'ஜல்லிக்கட்டு மிருகவதை அல்ல'-கமல் ஆதரவு 

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஜனவரி 9- ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின்  கலாச்சாரமாகப் பார்க்கப்பட வேண்டியது. எனவே, அதனை மிருகவதையாகக் கருதத் தேவையில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்ள வந்திருந்த போது, செய்தியாளர்களிடம் பேசிய கமல்,   "ஏறு தழுவுதல் என்ற வார்த்தையிலிருந்து வந்தது.  

தழுவுதல் எனக் கூறுவதில் உள்ள பரிவுத் தன்மை, ஜல்லிக்கட்டு எனும் வார்த்தையில் இல்லை. மேற்கத்திய நாடுகளில் மாட்டை வைத்து போட்டி நடத்துவார்கள். போட்டி முடிந்ததும்,  அதன் இறைச்சி தட்டில் வைத்து அனைவருக்கும் பறிமாறப்படும்.  எனினும், தமிழ்நாட்டில் அவ்வாறு காளை மாடுகள் கொல்லப்படுவதில்லை. 

ஜல்லிக்கட்டுக்குத் தடைப்போட்டால்,  அதே போல் பிரியாணிக்கும் தடை கோர முடியுமா?"  என கமல்ஹாசன் கேள்வியெழுப்பினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS