''அழாதே தம்பி..'': சிவகார்த்திகேயனுக்கு ரஜினி அறிவுரை

இந்தியச் சினிமா
Typography

சென்னை, அக்டோபர் 15-  தன்னைச் சிலர் மிரட்டுவதால் அழுத சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  போன் செய்து அறிவுரை வழங்கியுள்ளாராம். 

முன்னதாக, ரெமோ வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சியில், நடிகர் சிவகார்த்திகேயன், தம்மை சிலர் மிரட்டுவதாக  கூறி அழுதார். அப்போது, அனைத்தையும் கடவுள் பார்த்துக்கொள்வார் என  சிம்பு ஆறுதல் கூறினார். அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஷால் தெரிவித்துள்ளார்.  மேலும் பல பிரபலங்களும் சிவாவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு  தொலைப்பேசி வழி தொடர்புகொண்ட ரஜினிகாந்த்,   இந்த மாதிரி பிரச்சனைகளையெல்லாம் நினைத்து கவலைப்பட வேண்டாமல் மறந்து விட வேண்டும். குடும்பத்துடன் 10 நாட்களுக்கு வெளிநாட்டுக்குச் சென்று வாருங்கள். எல்லாம் சரியாகிவிடும்'' என கூறியுள்ளார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS