எம்ஜிஆரின் இன்னொரு பிம்பம் கேபிஆர்! 'வணக்கம் மலேசியா' நேர்காணல்! -(காணொளி) 

இந்தியச் சினிமா
Typography

'புரட்சித் தலைவர்', 'மக்கள் திலகம்' எம்ஜிஆருடன் நாற்பது ஆண்டுகள்..,  # இரட்டை வேடங்களில் எம்ஜிஆருக்கு மாற்றாக- # எந்நேரமும் உடனிருக்கும் மெய்க்காவலராக- # அரசியல் களத்தில் அசைக்க முடியா தொண்டனாக- # குடும்பத்தில் ஒருவராக- திகழ்ந்தவர் கேபிஆர் என்றழைக்கப்படும் கே.பி.ராமகிருஷ்ணன்.

மக்கள் திலகத்துடன் அவரது கடைசி நிமிடம் வரை உடனிருந்த அந்தப் பசுமையான காலத்தை எண்ணிப் பார்த்து மனம் கலங்குகிறார் கேபிஆர்.

அண்மையில் மலேசியாவுக்கு வருகை புரிந்த கேபிஆர், நீண்டகாலமாக எம்ஜிஆருடன் தாம் கொண்டிருந்த உறவை- அவரிடம் பணிபுரிந்த அனுப வத்தை 'வணக்கம் மலேசியா' மின் செய்தி ஊடகத்துடன் பகிர்ந்து கொண்டார்.

"புரட்சித் தலைவர் எங்களையெல்லாம் விட்டுப் பிரிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. அவர் எங்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் மரணத்தை வென்றவர். சாகாவரம் பெற்றவர்" என்கிறார் கேபிஆர்.

'நாடோடி மன்னன்' படத்தில் தொடங்கி, எம்ஜிஆர் நடித்த இரட்டை வேடப் படங்கள் அனைத்திலும் அவரது 'டூப்'பாக, பிரதி பிம்பமாக கேபிஆர் நடித்தி ருக்கிறார்.

எம்ஜிஆருடனான சொந்த அனுபவங்கள் மற்றும் அவருடைய திரைப்படங்களில் தாம் நடித்தது தொடர்பான அனுபவங்கள் பற்றி கேபிஆர் தம்மு டைய நேர்காணலில் சுவராஸ்யமான பல தகவல்களை வாரி வழங்கி இருக்கிறார். அந்த நேர்காணல் காணொளியை இங்கே காணலாம்: 

BLOG COMMENTS POWERED BY DISQUS