கணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார்  நடிகை ஸ்ரேயா

இந்தியச் சினிமா
Typography

மும்பை, ஏப்ரல்.4- அண்மையில் ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரேவ் கோஷ்சேவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரேயா,  கணவருடன் ரஷ்யாவில் குடியேறத்  திட்டமிட்டுள்ளார். 

தமிழ்- தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இவர் 2003 ஆம் ஆண்டில் "எனக்கு 20 உனக்கு 18" படத்தில் அறிமுகமானார். 'சிவாஜி' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து பிரபலமானார். 

'மழை', 'திருவிளையாடல்', 'ஆரம்பம்',, 'அழகிய தமிழ் மகன்', 'தோரணை', 'குட்டி', 'ரவுத்திரம்' ஆகிய  தமிழ் படங்களிலும் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ஸ்ரேயா.

தற்போது தமிழில் அரவிந்தசாமியுடன் 'நரகாசுரன்' படத்தில் நடித்து முடிந்துள்ளார். இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலரை அண்மையில் திருமணம் செய்து  கொண்டார். 

கைவசம் வேறு திரைப்படங்கள் எதுவும் இல்லாலதால்  சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு கணவருடன் ரஷ்யாவில் குடியேறத் திட்டமிட்டு வருவதாக ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS