ஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன்.! ' -சத்யராஜ் மகள் திவ்யா

இந்தியச் சினிமா
Typography

சென்னை, மார்ச்.31- 'மீண்டும் மீண்டும் சொல்கிறேன், நான் சினிமாவில் நடிக்கவில்லை' என்று மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா. 

சத்யராஜ் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றி வருகிறார். அந்தத் துறையில் பிஎச்டி படிப்புக்கான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார். 

அவர் சினிமாவில் நடிகப் போவதாக அடிக்கடி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனை அவரும் அவ்வப்போது மறுத்து வந்தார். இந்நிலையில் வடிவேல் என்பவர் தயாரிக்கும் படத்தில் திவ்யா நாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகின.

இதனை திவ்யா மீண்டும் மறுத்துள்ளார். இந்த முறை ரொம்பவே அழுத்தம் கொடுத்து மறுப்புத் தெரிவித்துள்ளார். 

அந்தப் படத்தில், என் தந்தை சத்யராஜ் தான் நடிக்கிறார்.  என் கிளினிக்கிலிருந்து வீடு திரும்பவே இரவு 9 மணிக்கு மேலாகிறது. இதில் நான் எங்கே சினிமாவில் நடிப்பது?  சினிமா துறை மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. ஆனால், இந்தப் படத்தில் நான் நடிக்கவோ, தயாரிக்கவோ இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS