'பிரித்து மேய்ந்து விட்டீர்கள் யோகி பி'; சந்தோஷ் நாராயணன் டிவிட்டர்! (VIDEO)

இந்தியச் சினிமா
Typography

கோலாலம்பூர், மார்ச் 2- மலேசியாவின் பிரபல ரேப் பாடகர் யோகி பி, நடிகர் ரஜினிக்கு மீண்டும் பாடல் பாடியுள்ளார். காலா படத்தில் தனது இசையில் பாடிய அவரை, பெருமையோடு பாராட்டி டிவிட் செய்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

தனுஷ் தயாரிப்பில் வண்டார்பார் நிறுவனம் நேற்று காலா படத்தின் டீசரை வெளியிட்டது. ஒரு நிமிடம் 17 வினாடிகள் ஓடும் அந்த டீசரில் யோகி பி குரலில் ஒலிக்கும் தீம் பாடலே முழுக்க முழுக்க வருகிறது. யோகி பி-யின் குரலுக்கும் காட்சிகளுக்கும் ரஜினியின் ஸ்டைலுக்கும் நல்ல சுவாரஸ்யமான படைப்பாக டீசர் வந்துள்ளதாக பலர் தங்களின் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தனது டிவிட்டர் பக்கத்தில் யோகி பி-யைப் பாராட்டி பேசியுள்ளார். அதில், 'காலா படத்திற்காக யோகி பி உடன் இணைவதில் மகிழ்ச்சி. அவர் சிறந்த மனிதர், நல்ல திறமையாளர். காலா டீசருக்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றி' என்று கூறி, தமிழில் 'பிரித்து மேய்ந்து விட்டீர்கள் ஐயா' என்று எழுதியுள்ளார்.

பாடகர்களுக்கும் சக கலைஞர்களுக்கும் நன்றி தெரிவிப்பது வழக்கமானது தான் என்றாலும் சந்தோஷ் டிவிட்டரில் இறுதியாக எழுதியிருக்கும் 'பிரித்து மேய்ந்து விட்டீர்கள் ஐயா' என்ற வரி, யோகி பி-இன் அதீத உழைப்புக்குக் கிடைத்த மிக பெரிய அங்கீகாரம் என்கின்றனர் அவரின் ரசிகர்கள்.

இதற்கு முன்னர் எந்திரன் படத்திற்காக ரஜினிக்கு யோகி பி பாடியிருந்தார். அந்த பாடல் மிகவும் புகழ் பெற்றது. அதன் பின்னர் இப்போது மீண்டும் ரஜினிக்காக பாடியுள்ளார் யோகி பி. 

BLOG COMMENTS POWERED BY DISQUS