சிம்புவுக்கும் ஓவியாவிற்கும் ரகசிய திருமணம்? ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஜன.10- சர்ச்சைகளுக்கு புகழ்பெற்ற சிம்புவுக்கும் பிக் பாஸ் புகழ் ஓவியாவுக்கும் திருமணமாகி விட்டதாக தகவல் பரவி வருகிறது. இருவரும் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஆரவை மனதார காதலித்தார் ஓவியா. ஆனால் ஆரவ் அவரின் காதலை ஏற்கவில்லை. ஆரவின் மனம் மாறும் என்று காத்திருந்த ஓவியா பின்னர் தன் மனதை மாற்றிக் கொண்டார். பின்னர் சிங்கிளாக நிம்மதியாக இருப்பதாக தெரிவித்தார் ஓவியா.

புத்தாண்டுக்கு பிரத்தியேகமாக மரண மட்டை எனும் பாடலை சிம்புவின் இசையில் பாடினார் ஓவியா. அபோதே இருவரும் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், இருவரும் திருமணமாகி மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் ஒன்று அண்மைய சில நாட்களாக இணையத்தில் பரவி வருகிறது. இருவரும் ரகசியமாக திருமணம் செய்தி கொண்டதாகவும் இதனால் ஓவியாவின் ரசிகர்கள் அதிச்சி அடைந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.

ஆனால் விசாரித்ததில், இது நம்ம ஆளு படத்தின் புகைப்படத்தை யாரோ ஒருவர் மாற்றி அமைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டது போல காட்டி விட்டதாக கூறப்படுகிறது. இந்த வேலையைப் பார்த்தவன் எவன் என ஓவியா ஆர்மிகாரர்கள் தேடுவதாகவும் செய்தி.

BLOG COMMENTS POWERED BY DISQUS