நட்சத்திர விழா: சங்க கட்டிடம் கட்ட மலேசியத் தமிழர்களிடம் எதற்கு வசூல்? அஜீத் கேள்வி!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஜன.10- சமீபத்தில் மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை விழாவில் நடிகர் அஜீத்குமார் பங்கேற்கவில்லை. நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நடிகர்கள் தான் பணம் போட வேண்டும். நாம் தான் நிறைய சம்பாதிக்கிறோமே நாமே செலவு செய்து கட்டிடம் கட்டலாமே என்று அஜீத்குமார் கூறியதாகவும், அதனை நடிகர் சங்கப் பொறுப்புகளில் உள்ளவர்கள் சட்டை செய்யாததால், அஜீத் அவ்விழாவை புறக்கணித்த்தாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் நோக்கில் இந்த நட்சத்திர விழா, மலேசியாவில் நடத்தப்பட்டது.  நடிகர்கள் பெருமளவில் சம்பாதிக்கிறார்கள். அவர்களிடம் இல்லாத பணமா நம்மிடத்தில் இருக்கிறது? அவர்கள் கட்டிடம் கட்ட நாம் பணம் தர வேண்டுமா என்று மலேசிய மக்கள் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல காலமாக நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுகிறேன் என்று கூறி பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தக் கட்டிடம் இன்னும் கட்டப்படாமல் இழுவையில் இருக்கிறது.  அந்தக் கட்டிடத்தை உருவாக்குவதற்கு ஏன் அவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்று இந்திய மக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.  

நட்சத்திர கலைவிழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இதர பிரபலங்கள் கலந்து கொண்டனர். ரஜினியின் மருமகன் தனுஷ் இவ்விழாவில் பங்கேற்கவில்லை. நடிகர்கள் விஜய், சிம்பு, அரவிந்த்சாமி, சந்தானம், சிபிராஜ் உள்ளிட்டோரும் அவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிட்த்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS