மாமியாருடன் மோதல்: ஐஸ்வர்யா ராய் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா?

இந்தியச் சினிமா
Typography

மும்பை, ஜன.10: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மாமியார் வீட்டில் இருந்து வெளியேறப் போவதாக பல தகவல்கள் கசிந்து வருகின்றன.  

உலக அழகியும், பாலிவுட்டின் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் மற்றும் ஜெயாவின் மகனான நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்ததில் இருந்து தனது மாமனார் மாமியாருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். அமிதாப்பிற்கு சொந்தமான 'ஜல்சா' என்றழைக்கப்படும் பங்களாவில்தான் அவர்கள் வசித்து வருகிறார்கள். 

இதனிடையில், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரின் மாமியார் ஜெயா பச்சனுக்கும் இடையில் சுமூகமான உறவு இல்லை என்று சில காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதே வேளையில், ஐஸ்வர்யாவுக்கும் அபிஷேக்கின் சகோதரியான ஸ்வேதாவுக்கும் பிரச்சனை எழும்பி உள்ளதாக சில ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

இவ்வாறான தகவல்கள் வெளியாகியுள்ள வேளையில், ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் சேர்ந்து மும்பையில் ரூ. 21 கோடிக்கு அபார்ட்மென்ட் ஒன்றை வாங்கியுள்ளனர். ஐஸ் தனது கணவர் மற்றும் மகள் ஆராத்யாவுடன் அந்த வீட்டில் தனிக்குடித்தனம் போகப் போவதாக செய்திகள் பரவலாகி வருகின்றன. 

அபிஷேக் பச்சனுக்கு தனது பெற்றோர் மீது அதிகப் பாசம் இருக்கின்றது என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களை விட்டு அவர் கண்டிப்பாக தன் மனைவியுடன் தனிக்குடித்தனம் போக மாட்டார் என்று அவரின் நண்பர்கள் வட்டாரம் கருத்து தெரிவித்துள்ளனர். 

அபிஷேக் தனது பெற்றோரை விட்டு தனிக்குடித்தனம் செல்ல மாட்டார் என்பதை ஐஸ்வர்யாவும் நன்கு அறிந்துள்ளார். அந்த வீடு, ஒரு முதலீட்டுக்காகவே வாங்கப்பட்டிருக்கும். சிறு பிரச்சனையை ஊடகங்கள் பெரிதாக்குகின்றன என்று அந்த வட்டாரம் கூறியுள்ளது. 

ஐஸ்வர்யாவை திருமணம் செய்வதற்கு முன்னர், அபிஷேக் பச்சனுக்கும், பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் கரிஷ்மா திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் போக விரும்பியதால் அபிஷேக், நடக்கவிருந்த தங்களின் திருமணத்தை நிறுத்தி, அவர்களின் உறவையும் முறித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS