ரஜினியின் 2.0 ஏப்ரல் 14 அன்று திரையீடு!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, டிசம். 30- அதிகப் பொருள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 2.0 திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  வசூல் சாதனை நடத்திய 'எந்திரன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமே 2.0 என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ரஜினிகாந்த் நடித்த படங்களிலேயே இதுதான் அதிகச் செலவில் அதாவது 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை பிரபல இயக்குனர் ஷங்கர், தனது பிரமாண்ட பாணியில் தயாரித்துள்ளார்.

இந்த 2.0 படத்தில் நாயகியாக எமி ஜேக்சனும் பிரபல போலிவுட் நடிகர் அக்‌ஷாய் குமார் வில்லனாகவும் நடித்திருக்கின்றனர். படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே இப்படம் திரையிடப்படவிருந்தது. 

எனினும் திட்டமிட்டபடி வெள்யிட முடியாமல் போகவே, ஜனவரி 26ஆம் தேதி இந்திய குடியரசு தினத்தில் வெளியிட அறிவிப்புச் செய்யப்பட்டு அப்போதும் அது தள்ளிப்போனது. 

தற்போது ஏப்ரல் 14ஆம் தேதி 2.0 வெளியிடப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. சென்னையில் தமது ரசிகர்களுடனான சந்திப்பின் போது ஏப்ரல் 14 -இல் வெளிவரும் என்பதை ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்தப் படத்திற்கு  அடுத்து 'காலா' படம் வெளிவரவிருக்கிறது என்று அறிவித்த ரஜினிகாந்த, அதன் பிறகு என்ன என்பது ஆண்டவன் கையில் இருக்கிறது என்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS