தங்க வீடு இல்லை; கமல்ஹாசனின் முன்னாள் மனைவிக்கு உதவும் அமீர்கான்!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, டிச.30- நடிகர் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகாவின் நிலையைக் கண்டு நடிகர் அமீர்கான் உதவ முன்வந்துள்ளார். சரிகா தங்கிருந்த அவரின் உழைப்பில் வாங்கிய வீடு தற்போது அவருக்கு சொந்தமில்லாமல் போனதே இதற்கு காரணம்.

கடந்த 2004ஆம் ஆண்டு கமலைப் பிரிந்தார் சரிகா. தான் நடித்த காலத்தில் சேமித்த பணத்தைக் கொண்டு மும்பையில் வீடு ஒன்றினை வாங்கினார். அதனை த்ன் அம்மாவின் பெயரிலேயே வாங்கினார் அவர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் சரிகாவின் தாயார் மரணமடைந்தார். முன்னதாக சரிகாவின் தாயார் தன் சொத்துகளுக்கு தனது குடும்ப நண்பரான டாக்டர் விக்ரம் தாக்கர் என்பவருக்கு உயில் எழுதி வைத்திருந்தார்.

இதனால் தன் உழைப்பில் வாங்கிய வீடாக இருந்தாலும் தற்போது வீடு இல்லாமல் அவதிக்குள்ளாகியுள்ளார் சரிகா.

இதனை அறிந்த சரிகாவின் தோழியும் அமீர்கானின் சகோதரியுமான நுஸ்ஷத், சரிகாவுக்கு உதவும்படி அமீர்கானிடம் கேட்டுக் கொண்டதாகவும் அமீர்கானும் உதவ முன் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS