பாகுபலிக்கு இந்த மாதிரி ரசிகையா..! முதுகில் பிரபாஸை பச்சை குத்திய ஜெர்மனி பெண்! (VIDEO)

இந்தியச் சினிமா
Typography

சென்னை, நவ.17- ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ரசிகை ஒருவர் தனது முதுகில் பிரபாஸின் படத்தினை பச்சைக் குத்தியுள்ளார். ராஜமெளலி இயக்கத்தில் பாகுபலி எனும் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இந்த படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றதுடன், வசூல் சாதனையையும் படைத்தது.  

பாகுபலியாக நடித்த பிரபாஸ் இந்த படத்தின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமடைந்தார். தெலுங்கு சினிமாவில் "டார்லிங்" என்று அழைக்கப்படும் பிரபாஸிற்கு, இந்த படத்தின் மூலமாக பெண் ரசிகைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.   

   ###காணொளி: நன்றி Subhadra Mukherjee

இந்நிலையில், ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர், பிரபாஸின் படத்தின் தனது முதுகில் பச்சைக் குத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும், இது பிரபாஸுக்கு அர்பணிக்கப்பட்டது எனவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.  

இந்த காணொளி ஜூலை மாதம் வெளியிடப்பட்டாலும் தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS