இலங்கையில் ஏ.ஆர் ரகுமான் நிகழ்ச்சி ரத்து!

இந்தியச் சினிமா
Typography

சென்னை ஏப்ரல் 6- பிரபல பின்னணி பாடகர்கள் பங்கேற்கும் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை மண்ணில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்த கூடாது என்ற எதிர்ப்புக்குரல் தமிழ்கத்தில் எழுந்தது. குறிப்பாக, சென்னையில் உள்ள அவரது வீட்டை சுற்றிலும் பல்வேறு தமிழ் அமைப்பினர் இலங்கை இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களை ஒட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்நிலையில், வரும் 23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில், ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடப்பது இதுவே முதல்முறை என்பதால் அந்நாட்டு மக்கள் இந்த நிகழ்ச்சியை காண மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தவர்களுக்கு இச்செய்தி அதிர்ச்சியை தந்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS