தீபிகாவின் கள்ளத்தனம்; நடிகர் ரன்வீரின் காதலை முறிந்தது!

இந்தியச் சினிமா
Typography

மும்மை, நவ.4- நல்ல பெயர் எடுக்க தீபிகா படுகோனே ரகசியமாக செய்த வேலையால் அவரின் காதல் முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, அவரது காதலர் ரன்வீர் சிங், ஷாஹித் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பத்மாவதி. ராணி பத்மாவதியாக தீபிகா நடித்துள்ளார்.

படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் கிளம்பியுள்ளன. பத்மாவதி 3டி ட்ரெய்லர் வெளியிடும் நிகழ்ச்சிக்கு மீடியாக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தீபிகா, ரன்வீர், ஷாஹித் கலந்து கொள்வதாக தெரிவிக்கவில்லை. தீபிகாவோ ரன்வீர், ஷாஹிதுக்கு தெரியாமல் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது குறித்து அறிந்த ரன்வீர், ஷாஹித் கோபம் அடைந்தனர்.

தீபிகா இப்படி நடந்து கொண்டது ரன்வீர் சிங்கிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் அவர் தீபிகாவுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். காதல் முறிந்துவிட்டது என்பது போன்று ட்வீட்டியுள்ளார். ஏற்கனவே தீபிகா, ரன்வீர் இடையே பிரச்சனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பத்மவாதி முன்னோட்டங்களைப் பார்த்த ரசிகர்கள் ரன்வீர், ஷாஹித் கபூர் பற்றி மட்டுமே பேசினார்கள். கூமர் பாடலை பார்த்தும் கூட யாரும் தீபிகாவை கண்டுகொள்ளவில்லை. இதனால் பொறாமையில் தீபிகா இப்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS