தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின்  முதல் போஸ்டர் வெளியீடு!

இந்தியச் சினிமா
Typography

 

சென்னை நவ.3- நடிகர் தனுஷின் ஹாலிவுட் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் மட்டுமல்ல, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்துகிறார் தனுஷ். ஹாலிவுட்டில் அவர் நடிக்கும் முதல் படம் “தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபக்கிர்” (The Extraordinary Journey ofthe Fakir) என்பதாகும். 

இயக்குனர் கென் ஸ்காட் இயக்கும் இந்தப் படத்தில், தனுஷுடன் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பெரினிஸ் பெஜோ, பர்கட் அப்டி, எரின் மொரியர்டி, ஆபெல் ஜாஃப்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தன் தந்தையை தேடி உலகெங்கும் பயணிக்கிற ஓர் இளைஞனின் பாத்திரத்தில் நடித்துள்ளார் தனுஷ். முழுக்க முழுக்க 'காமெடி'யாக இந்த படத்தை உருவாக்கி உள்ளார்களாம். 

ரோமன் பியூர்டோலஸ் என்பவர் எழுதிய நாவலின் அடிப்படையில் இந்தப் படத்தை எடுத்துள்ளாரபீயக்குனர்ஸ்காட். 2014- இல் வெளியான இந்தப் படம் 35 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. 

அமெரிக்க திரைப்பட சந்தையில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இந்தப் படம் சோனி பிக்சர்ஸ் உள்ளிட்ட மெகா நிறுவனங்கள் உலகெங்கும் வெளியிடுகின்றன. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS