இதனால் தாங்க ஓவியா எங்க தலைவி; 'ஓவியா ஆர்மி' பெருமை!1

இந்தியச் சினிமா
Typography

சென்னை, நவ.2- பிக் பாஸ் ஆரவ்வின் பிறந்தநாள் பார்ட்டியில் ஓவியா கலந்து கொண்டதை நினைத்து அவரது ஆர்மிக்காரர்கள் பெருமைப்படுகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியா ஆரவை காதலித்தார். 

ஆனால் ஆரவ் அவரின் காதலை ஏற்காததால் மனமுடைந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஓவியா. அதன் பிறகு சிங்கிளாக நிம்மதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆரவ் தனது பிறந்தநாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினார். ஆரவின் பிறந்தநாள் பார்ட்டியில் பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். முக்கியமாக ஓவியாவும் பார்ட்டிக்கு வந்திருந்தார்.

ஆரவ்விடம் மட்டும் அல்ல அவர் அனைவரிடமும் நன்றாக பழகுகிறார். அது தான் நல்ல குணத்தின் உச்சம். அதனால் ஆச்சரியப்பட வேண்டாம். இதனால் தான் நாங்கள் ஓவியாவை எங்கள் தலைவியாக ஏற்றுக் கொண்டோம் என அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து சந்தோசம் அடைந்துள்ளனர் ஓவியா ஆர்மி படையினர்.

ஆரவ்வின் பிறந்தநாள் பார்ட்டியில் ஓவியாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் காயத்ரி.

BLOG COMMENTS POWERED BY DISQUS