2.0 படத்தின் பிரமாண்ட இசை வெளியீடு ரஜினிகாந்த் இன்று துபாய் பயணம்!

இந்தியச் சினிமா
Typography

 சென்னை, அக்.25- நடிகர் ரஜினிகாந்த், 2.0 படத்தின் பிரமாண்ட இசை விழாவில் கலந்து கொள்ள இன்று துபாய் புறப்படுகிறார் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷாய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள படம் 2.0. ஆகும்.

'லைகா' நிறுவனம் ரூ.400 கோடி செலவில் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் உள்ள 'பர்ஜ் பார்க்' ஆடம்பர தங்கும் விடுதியில் அக்டோபர் 27 வெள்ளிக்கிழமை நடக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் தன் குழுவினருடன் படத்தின் பாடல்களை நேரடியாக வழங்கவிருக்கிறார். 

இதில் படக் குழுவினர் மற்றும் திரையுலக முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். அக்‌ஷாய் குமார், எமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர் உள்பட பலரும் துபாய்க்குப் போய்விட்டார்கள்.

இன்று படத்தின் நாயகன் ரஜினிகாந்த் விமானம் மூலம் துபாய் செல்கிறார். இந்த நிகழ்ச்சியைக் காண 10,000 ரசிகர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர். 12,000 ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப் படுகிறார்கள்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS