தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை: 'மெர்சல்'- சோதனை மேல் சோதனை:

இந்தியச் சினிமா
Typography

 

 சென்னை, அக்.14- இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருக்கும்  'மெர்சல்' படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைத்து விட்டதாக அதன் இயக்குனர் கூறியுள்ள போதிலு தணிக்கை வாரியம் அதனை மறுத்திருக்கிறது. 

தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் சுமார் 130 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள மெர்சல் படத்திற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து தீபாவளிக்கு திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனத் தணிக்கைக் குழு விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக மெர்சல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக இயக்குனர் அட்லீ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் படத்திற்கு விலங்கு நல வாரியத்திடம் அனுமதி பெறாததால் தணிக்கை சான்று வழங்கவில்லை எனத் தணிக்கைக் குழு விளக்கம் அளித்துள்ளது. இதனால் படம் வெளியாவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

முன்னதாக மெர்சல் படத்தில் புறா வரும் காட்சிகள் கிராபிக்ஸ் என்பதற்கான சான்று விலங்கு நல வாரியத்துடன் படக்குழு சமர்ப்பிக்காததாலும், படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பாம்பின் பெயரும் தவறாக அளிக்கப்பட்டதாலும் விலங்கு நல வாரியம் அனுமதி தரவில்லை. இதனால், திட்டமிட்டபடி தீபாவளியன்று மெர்சல் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.    

 

BLOG COMMENTS POWERED BY DISQUS