'மெர்சல்'-க்கு போட்டியாக தீபாவளி பந்தயத்தில் 'மேயாத மான்'

இந்தியச் சினிமா
Typography

 

சென்னை, அக்.13- ‘மெர்சல்’ படத்திற்கு போட்டியாக நடிகர் வைபவ்-பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மேயாத மான்’ படமும் தீபாவளிக்கு வெளியீடு காணவிடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் நடிப்பில் ‘மெர்சல்’ பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்படுகிறது. உலகம் முழுவதும் ‘மெர்சல்’ சுமார் 3,292 திரையரங்கில் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமன்றி, நடிகர் சசிகுமாரின் 'கொடிவீரன்', நடிகர் பரத்தின் 'பொட்டு' உள்ளிட்ட படங்களும் தீபாவளியன்று வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் `மேயாத மான்' படமும் தீபாவளி  பந்தயத்தில் களமிறங்குகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுரொட்டிகளில் 'மெர்சலான காளை வருதுங்க! கூடவே... மேயாத மானும் துள்ளி வருதுங்க!' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS