கங்கனாவின் கள்ளக் காதலால் கல்யாணம் முறிந்ததா? -ரித்திக் ரோஷன் மறுப்பு!

இந்தியச் சினிமா
Typography

மும்பை, அக்.12- நானும், சூசனும் விவகாரத்துப் பெற நடிகை கங்கனா காரணமா? அப்படி எதுவும் இல்லை என்று பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் திட்டவட்டமாக கூறினார். பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் 7 ஆண்டுகளாக தன்னுடன் தொடர்பு வைத்திருந்ததாக நடிகை கங்கனா ராணவத் தெரிவித்துள்ளார். ஆனால் இதை ரித்திக் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இருவருக்கும் இடையே சண்டை தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. கங்கனாவின் குற்றச்சாட்டு அபத்தமானது. இரண்டு பிரபலங்கள் 7 ஆண்டுகளாக தொடர்பு வைத்திருந்தால் அது மீடியாவுக்கு தெரியாமலா போய்விடும் என்று கேட்டுள்ளார் ரித்திக்.

ரித்திக் ரோஷன் கங்கனாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை அவரின் மனைவி சூசன் கண்டுபிடித்ததால்தான் விவகாரத்து வாங்கி சென்றுவிட்டார் என்று கூறப்பட்டது. இதை ரித்திக் மறுத்துள்ளார். 

"நானும், சூசனும் பிரிவதற்கு கங்கனா காரணம் இல்லை. ஒரு தம்பதி பிரிந்தால் கள்ளத்தொடர்புதான் காரணமாக இருக்க வேண்டுமா? நானும், சூசனும் தற்போதும் நல்ல நண்பர்களாக உள்ளோம்" என்று ரித்திக் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் விவகாரத்து பெற்றதற்கான காரணம் எனக்கும், சூசனுக்கும் தெரியும். அதை வெளியே சொல்ல விரும்பவில்லை. அதே போன்று கங்கனா விவகாரம் பற்றி இனி பேச விரும்பவில்லை" என்று ரித்திக் கூறியுள்ளார்.  

BLOG COMMENTS POWERED BY DISQUS