விக்ரமின் மகனுடன் சேரப்போவது யார்? சூர்யா 'மகளா', கமல் மகளா?

இந்தியச் சினிமா
Typography

 சென்னை, அக்.9- ஒருவழியாக நடிகர் விக்ரமின் மகன் அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு வந்துவிட்டது. அண்மையில் வெளியாகி தெலுங்கில் பெரும் வெற்றிகண்ட அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் அறிமுகமாக இருக்கிறார் விக்ரம் மகன் துருவ். 

நாயகனும் தயாரிப்பாளரும் மட்டும்தான் முடிவாகி இருக்கிறார்கள். இயக்குநர், கதாநாயகி உள்ளிட்ட பிறர் இன்னும் முடிவாகவில்லை. விக்ரமிற்கு இந்தப் படத்தை ஒரு பெரிய இயக்குநர் தான் இயக்க வேண்டும் என்று ஆசை உண்டு. ரீமேக் செய்ய பெரிய இயக்குநர் யாரும் முன்வருவார்களா? என்று தேடிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக நடிப்பதற்கு இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. கமலின் இளைய மகள் அக்‌ஷராவை ஜோடியாக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

அக்‌ஷரா மட்டுமல்லாமல், தெலுங்கில் அணமையில் அறிமுகமாகி இருக்கும் ஸ்ரியா ஷர்மாவிடமும் பேசி வருகிறார்களாம். இவர் 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் சூர்யா-ஜோதிகாவுக்கு மகளாக நடித்தவர். இரண்டு வாரிசுகளில் ஒருவருடன்தான் 'டூயட்' பாடப் போகிறார் விக்ரமின் மகன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS