நடிகை சமந்தா–நாக சைதன்யா திருமணம்

இந்தியச் சினிமா
Typography

சென்னை.அக்.7- பல இளைஞர்களின் மனதைக் கொள்ளைக் கொண்ட சமந்தா நேற்று கோவாவில் நாக சைதன்யாவைத் திருமணம் செய்துகொண்டார்.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் கோவா நட்சத்திர விடுதியில் இந்து முறைப்படி நேற்று திருமணம் நடைபெற்றது.

நாளை கிறிஸ்துவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெறும். இந்த திருமணத்திற்கு சுமார் ரூ.10கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தத் திருமண விழாவைத் தொடர்ந்து வரும் 10 ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS