காதலி நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் அமெரிக்காவில் ஒரே கொண்டாட்டம்!

இந்தியச் சினிமா
Typography

நியூயார்க், செப்.16- "அமெரிக்காவில் கொண்டாடு இல்லனா ஆப்பிரிக்காவில் கொண்டாடு, அதே ஏன் இணையத்தில போட்டு எங்க வயிற்றெரிசலை கிளப்புறே".. இது தான் பல நெட்டிசன்களின் மனக்குமுறல். இதற்கு காரணம் நயன்தாரா, விக்கினேஷ் சிவனின் அமெரிக்க கொண்டாட்டம் தான்.

தன் பிறந்தநாளை இப்படி கொண்டாடுவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் மறக்க முடியாத நாளாக இருக்க வேண்டும் என்று நினைத்து இயக்குனர் விக்கியை நயன்தாரா அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றார். நியூயார்க் நகரில் காதலர் விக்கியின் பிறந்தநாளை கொண்டாடினார் நயன்தாரா.

நமக்கு நெருக்கமானவர்களுக்கு நேரத்தை செலவிடுவதைவிட சிறந்த பரிசு அளிக்க முடியாது என்பதை உணர்ந்த நயன்தாரா விக்கியின் பிறந்தநாள் அன்று அவருடனேயே இருந்தார். நியூயார்க் நகரை காதல் ஜோடி சுற்றிப் பார்த்தது. ப்ரூக்ளின் பாலத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்கள் தீயாக பரவியது.

பிறந்தநாளை இப்படி கொண்டாடுவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை முதலில் கடவுளுக்கு நன்றி. வாழ்க்கையை அழகாகவும், பிரகாசமாகவும் ஆக்கியதற்கு மை டியர் நயன்தாரவுக்கு நன்றி என்று டுவிட்டரில் வெளியாக்கியுள்ளார் இயக்குனர் விக்கி. 

BLOG COMMENTS POWERED BY DISQUS