மகனுக்காக மீண்டும் இயக்குனராகிறார் நடிகர் தம்பி ராமையா! 

இந்தியச் சினிமா
Typography

 

சென்னை, செப்.19- நடிகர் தம்பி ராமையா தனது மகனை நாயகனாக வைத்து ‘உலகம் விலைக்கு வருது’ எனும் புதிய படத்தை இயக்கவுள்ளார்.

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமான ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் அந்தப் படம் சரியாகப் ஓடவில்லை. 

இந்நிலையில் புதிய படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது என அவர் கூறினார். நடிகர் முரளி நடித்த ‘மனுநீதி’ படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவில் அடியெடுத்து வைத்த தம்பி ராமையா.

வடிவேலுவை ஹீரோவாக வைத்து ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ எனும் படத்தை இயக்கினார். ‘மைனா’ படத்திற்காக தேசிய விருதுபெற்ற நடிகர் தம்பி ராமையா, காமெடியனாக மட்டுமல்லாமல், குணச்சித்திர நடிகராகவும் சினிமாவில் கலக்கி வருகிறார். 

இவர் தற்போது தன் மகன் உமாபதியை வைத்து ‘உலகம் விலைக்கு வருது’ படத்தை இயக்குகிறார். இதில் சமுத்திரகனி, கே.எஸ். ரவிகுமார், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் எனப் பலரும் நடிக்கிறார்கள். நாயகிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. 

இந்தப் படம், உலகப் புகழ் பெற்ற நடிகர் சார்லின் சாப்ளினின் ‘மழை பெய்யும் போது குடை பிடிக்காமல் நடந்துபோவது எனக்குப் பிடிக்கும்.., அப்போதுதான், நான் அழுவது யாருக்கும் தெரியாது. (I love to walk in the rain becouse nobody can see my tears) என்ற வரிகளை மையப்படுத்திய ஒரு படம் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS