'பாகுபலி'யின் மகிழ்மதி அரண்மனையைச் சுற்றி பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி!

இந்தியச் சினிமா
Typography

பெங்களூரு, செப்.10- பிரமாண்டம் என்றால் இது தான் என்று ரசிகர்களை ஆர்பரிக்க செய்த மகிழ்மதி அரண்மணை தற்போது மக்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. யாரெல்லாம் பாகுபலியாகவும் தேவசேனாகவும் படம் பிடித்து கொள்ள நினைக்கிறீர்களோ அங்கே சென்று செல்ஃபி எடுத்து கொள்ளலாம். 

பாகுபலி படத்திற்காக போடப்பட்ட மகிழ்மதி மற்றும் குந்தலதேச அரண்மனைகள் இன்னும் உடைக்கப்படாமலேயே வைக்கப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் போடப்பாட்ட அந்த அரங்குகளைக் காண தற்போது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கலை இயக்குனர் சாபு சிரில் தலைமையில் உருவாக்க போர் கருவிகள் மற்றும் தேர்கள் கூட கலைக்கப்படாமல் அப்படியே அங்கே வைக்கப்பட்டுள்ளது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS