'தல' அஜித்திற்கு தோளில் அறுவை சிகிச்சை; மூன்று மாதம் ஓய்வு!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, செப்.10- விவேகம் படத்தில் நடித்தபோது தோளில் அடிப்பட்டதால் அஜித்திற்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் மூன்று மாதத்திற்கு படத்தில் ஏதும் நடிக்காமல் ஓய்வு எடுக்குமாறு அஜித்திற்கு மருத்துவர்கள் கட்டளை இட்டுள்ளனர்.

விவேகம் படத்தில் சண்டை காட்சியின் போது அஜித்திற்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. காயத்தினால் அதிக வலி இருந்தாலும் தற்காலிகமாக சிகிச்சை எடுத்துக் கொண்டு படத்தில் நடித்து முடித்தார் அஜித்.

படம் முடிந்து வெளியாகி விட்டதால் தற்போது அஜித்திற்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சை முடிந்து அஜித் வீடு திரும்பி விட்டார். இருந்தாலும், அவர் மூன்று மாதத்திற்கு கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS