விண்வெளி வீரராகிறார் நடிகர் மாதவன்!

இந்தியச் சினிமா
Typography

 மும்பை, செப்.8- விண்வெளியை மையமாக வைத்து பாலிவுட்டில் ஒரு படம் உருவாக உள்ளது. அதில் நடிகர் மாதவன் நாயகனாக நடிக்கவுள்ளார். 'லாகூர்' எனும் படத்தை இயக்கிய பாலிவுட் இயக்குநர் சஞ்சய் புரான் சிங் சௌஹான் தான் இந்தப் புதிய விண்வெளிப் படத்தை இயக்குகிறார். 

இப்படத்திற்கு 'சந்தா மாமா தூர் கே' (Chanda Mama Door Ke) என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் மாதவன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இரண்டு விண்வெளி வீரர்களைப் பற்றிய கதை இது என்று படக் குழு தெரிவித்துள்ளது. 

அந்த இரண்டு விண்வெளி நாயகர்களாக மாதவன் மற்றும் ‘தோனி தி அன்டோல்டு ஸ்டோரி’ படத்தில் தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் ஆகியோர் நடிக்க உள்ளனர். 

விண்வெளி வீரர்களாக நடிப்பதால் அதற்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெற விரும்பி சுஷாந்த் சிங் மற்றும் மாதவன் ஆகியோர் நாசாவில் பயிற்சி பெற்று வருகிறார்கள். 

’அப்போலோ13’, ‘தி மார்ஷியன்’ ஆகிய படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தப் படத்திலும் பணியாற்ற உள்ளார்களாம். இப்படத்தில் நவாஸ்தின் சித்திக்கி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விண்வெளி தொடர்பாக தமிழிலும் 'டிக் டிக் டிக்' எனும் திரைப்படம் ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS