துபாயில் இசை, ஹைதரபாத்தில் டீசர், சென்னையில் டிரைலர்...! அக்டோபரில் எந்திரன் 2.0 துவக்கம்!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, செப்.7- ரஜினி நடிப்பில் அடுத்து பெரிதாக எதிர்ப்பார்க்கப்படும் படம் எந்திரன் 2.0. தீபாவளிக்கு வருகிறது என்ற நிலையில், அது பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் ரசிகர்களின் ஆர்வம் குறையவில்லை. எப்போது படம் பற்றிய செய்தி வரும் என பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் 2.0 மேக்கிங் வீடியோவை வெளியிட்டார் இயக்குனர் ஷங்கர். காட்சி படமாக்குவதிலேயே இவ்வளவு புதுமையா, பிரமாண்டமா என்று வியந்த நிலையில் இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் 2.0 படத்தின் புதிய தகவலை லைகாவின் ராஜூ மகாலிங்கம், தன் டுவிட்டரில் வெளியிட்டுகிறார். 

அதில், 2.0 படத்தின் இசை வெளியீடு, அக்டோபர் மாதம் துபாயிலும், டிரைலரைச் சென்னையிலும் வெளியீட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். பாகுபலி-2 படத்திற்கு பிறகு இந்திய அளவில் மிகுந்த எதிர்ப்பார்பை ஏற்படுத்தியிறுக்கும் 2.0 என்பதனால், படத்தின் புரொமோஷன் வேலைகளை அக்டோபர் முதல் ஆரம்பிக்கப்படுகிறது லைகா நிறுவனம். 

BLOG COMMENTS POWERED BY DISQUS