மாணவி அனிதா பற்றி நயன்தாராவின் அடுத்த பட போஸ்டர்..!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, செப்.4- நீட் தேர்வு தொடர்பாக மன உளைச்சலுக்கு ஆளான மாணவி அனிதாவின் மரணத்தை, நயன்தாராவின் அடுத்த படத்தின் போஸ்டரில் அச்சடித்துள்ளனர் அப்படக்குழுவினர். 

பெரும் சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ள நீட் தேர்வினை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா மன உளைச்சலால் சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுமக்கள், மாணவர்கள் என பலர் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழ் திரையுலகமும் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், ஜிவி.பிரகாஷ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அனிதாவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், போஸ்டர்கள் மூலமும் திரையுலகம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. நயன்தாரா நடித்துள்ள அறம் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் அனிதாவினை மையப்படுத்தி வாசகங்களும் காட்சியும் அச்சடிக்கப்பட்டுள்ளன. 

அதில், "அரசு அறம் காக்க தவறுவதால் இன்னும் எத்தனை அனித்தாக்கள் உயிர் 'நீட்'க்க போகிறார்களோ" என்று எழுதியுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாக பரவி வருகிறது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS