மீண்டும் செந்தில் திரையுலகப் பிரவேசம் சூர்யாவுடன் சேர்ந்து கலக்குகிறார்!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஆக.20- விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் செந்தில் நடித்திருக்கிறார்.

'போடா போடி', 'நானும் ரவுடி தான்' படங்களைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் மூன்றாவது படம் இது. சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் ரம்யா கிருஷ்ணன், சரண்யா, கோவை சரளா, கே.எஸ் ரவிக்குமார், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது.

இப்படத்துக்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. சூர்யா இப்படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நடிகர் செந்தில் ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நானும் சூர்யாவும் இந்தப் படத்தில் ஒரே ஆபிஸில் வேலை பார்ப்போம். படத்தின் டூயட் காட்சிகளைத் தவிர எல்லா காட்சிகளிலும் சூர்யாவுடன் வருவேன் . இந்தப் படம் தவிர இன்னும் மூன்று படங்களில் நடிக்கவிருக்கிறேன். மறுபடியும் நான் சினிமா உலகில் பரபரப்பாகி விட்டேன் என்று கூறியிருக்கிறார் செந்தில்.

BLOG COMMENTS POWERED BY DISQUS