'பிக் பாஸ்': மூன்றே நாளில் மூன்று புதியவர்கள்; இனிமேல் தான் விளையாட்டே ஆரம்பம்!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஆக.18- ஓவியா போனால் என்ன, ஒய்யாரமாய் மூன்று புதிய முகங்களை வீட்டிற்குள் நுழைத்து விட்டார் நம்ம பெரிய முதலாளி, பிக் பாஸ். யாருங்க அந்த புது முகங்கள், அதுவும் மூன்றே நாளில் மூவர்..!

நேற்று முன்தினம் பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி, அண்மையில் வெளியான மிளகா படத்தில் நடித்திருந்த நடிகை சுஜா வருணி பிக் பாஸ் வீட்டில் கிரேன் மூலம் உள்ளே சென்றார். அவரைத் தொடர்ந்து நேற்று புதுமுக நடிகர் ஹரீஷ் கல்யாண் விட்டிற்குள் நுழைந்தார். இவர் பிக் பாஸ் வீட்டின் சுவரிலிருந்து எகிறி குதித்து உள்ளே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, விவேக் உடன் நடித்திருந்த நடிகை காஜல் பசுபதி இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறார். விஜய் டிவியில் காட்டப்பட்ட புரோமோவில் நடிகை காஜல், ஆரவ்விடம் ஓவியா காதல் பற்றி கேள்வி கேட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. 

50 நாட்கள் கடந்து விட்ட நிலையில், பிந்து மாதவி உட்பட புதிதாக நால்வர் வீட்டிற்குள் வந்துள்ளதால் இனி தான் பழையவர்களுக்கும் புதியவர்களுக்கும் பிரச்சனை உண்டாகும், போட்டியே இனிதான் ஆரம்பம் என்கின்றனர்.

எது எப்படியோ, ஓவியா வெளியேறியதால் பிக் பாஸ் நிகழ்ச்சி தொய்வடைந்து விட்டது என மக்கள் நினைக்க கூடாது என்பதில் விஜய் டிவி மிக உன்னிப்பாக இருப்பது தெரிகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS