பிக் பாஸ்: சினேகனை ஓங்கி அறையப் போறேன்! -பிந்து மாதவி

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஆக.17- 'கட்டிப்பிடி மன்னன்' சினேகனை ‘சப்பு’ன்னு அறைய போவதாக மிரட்டியுள்ளார் பிந்து மாதவி. ஓவியா கிளம்பிய பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் ‘வைல்டு கார்டு’ மூலம் நடிகை சுஜா வருணி நேற்று பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வைல்டு கார்டு மூலம் ஏற்கெனவே வந்த பிந்து மாதவி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார் என்று வலைதளவாசிகள் கலாய்த்ததைப் பிக் பாஸ் கவனித்துவிட்டார்.

பெண்கள் கண் கலங்கினால் (காயத்ரி தவிர்த்து) ஓடி வந்து கட்டிப் பிடித்துத் தடவி ஆறுதல் சொல்லும் சினேகனை சப்புன்னு அறைய வேண்டும் என்று பிந்து மாதவி கோபமாக கூறும் முன்னோட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

’சினேகனின் வயசுக்கு மரியாதை கொடும்மா..’ என்று வையாபுரி பிந்துவிடம் கூறுகிறார். பிக் பாஸ் கொடுக்கும் காசுக்கு இப்போதுதான் பிந்து கூவ ஆரம்பித்திருக்கிறார். பிந்து-சினேகன் சண்டையை வைத்து மீண்டும் நிகழ்ச்சியை தூக்கிநிறுத்தப் பார்க்கிறார் பிக் பாஸ்.

BLOG COMMENTS POWERED BY DISQUS