திரிஷாவின் முன்னாள் காதலர்  காஜல் கைக்கு மாறி விட்டாரா?

இந்தியச் சினிமா
Typography

 

ஹைதராபாத், ஆக.16- நடிகை திரிஷாவின் முன்னாள் காதலரான ராணா, தற்போது காஜலின் காதலராகிவிட்டார் என்று தெலுங்குத் திரையுலகில் பெரும் பரபரப்புடன் தகவல் பரவியுள்ளது. 

ராணாவும், காஜல் அகர்வாலும் சேர்ந்து நடித்த 'நேனே ராஜு, நேனே மந்திரி' என்ற படம் வெளியாகி வெற்றிக் கொடி நாட்டியுள்ளது. பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளமாட்டார் காஜல்.

ஆனால், இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் மட்டும் தவறாமல் கலந்து கொண்டார்.

காஜலும், ராணாவும் காதலிப்பதாக தெலுங்கு திரையுலகில் கிசுகிசுத் தகவல் தீயாகப் பரவியுள்ளது.க்கிறார்கள். தனக்கும், நடிகர் ராணாவுக்கும் இடையே காதல் என்ற செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகை காஜல். 

அதெல்லாம் இல்லை. அவரும் நானும் நல்ல நண்பர்கள்.

நீண்ட காலமாக நண்பர்களாக உள்ளோம். நட்பைத் தவிர எங்களுக்கு இடையே வேறு எதுவும் இல்லை. அவர் கடினமாக உழைக்கும் நடிகர் என்கிறார் காஜல்.

பாகுபலியின் வெற்றியால் ராணா மாறிவிடவில்லை. அவர் எப்பொழுதுமே நல்ல நடிகர். அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை 'பாகுபலி' பெற்றுத் தந்துள்ளது என்று காஜல் கூறுகிறார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS