விஜய் சேதுபதியின் குமுதாவா? பவானி சங்கரா? 'பிக் பாஸ்' வீட்டில் அடுத்தது யார்?

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஆக.11- பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒரு பிரபல நடிகை கலந்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ஓவியா வெளியேறிய பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

இந்நிலையில் புது நடிகை ஒருவரை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வரப் போகிறார்கள். விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்த நந்திதா ஸ்வேதா வரும் 15ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்கு வரக்கூடும் என்று கூறப்படுகிறது. 

கல்யாணம் முதல் காதல் வரை டிவி தொடர் புகழ் பிரியா பவானிசங்கர், பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. வரப்போவது நந்திதாவா? பிரியாவா? என்பது 15-ஆம் தேதி தெரியும்.

ஓவியாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வரும் முயற்சியிலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஓவியா வரவை எதிர்பார்த்து இருக்கிறது ஓவியா ஆர்மி.

 

பிக் பாஸ் வீட்டிற்கு யார் வந்தாலும் ஓவியா அளவுக்கு இருக்க முடியாது. எனவே, இந்த நிகழ்ச்சி பெரிய சரிவுதான் என்று ஓவியா ஆர்மி கூறுகிறார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS