‘ஆளப்போறான் தமிழன்’– விஜய்யின்  படப் பாடல்: முன்னோட்டம் அதிருதில்ல!- (VIDEO)

இந்தியச் சினிமா
Typography

 சென்னை, ஆக.11– இளைய தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலின் முன்னோட்டம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேவேளையில் மிக நீளமான அந்தப் பாடலும் வெளியாகி ரசிகர்களை அசத்தி வருகிறது.

அட்லீ இயக்கத்தின் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல். படத்தில் விஜய் அப்பா மற்றும் இரண்டு மகன்களாக நடித்துள்ளார். இந்த படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

இந்நிலையில், ஆளப்போறான் தமிழன் பாடலின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. 'இசைப்புயல்' ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் வெளியாகியுள்ள இந்த முன்னோட்டத்தை விஜய் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து பரவசமடைந்து வருகிறார்கள்.  

பாடல் முன்னோட்டம் வெளியான சில மணிநேரத்திற்குள் அதை 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். விஜய் ரசிகர்களுக்கு இது மிகவும் பிடித்துள்ளது. முன்னோட்டமே அதிர்கின்றது என்றால் முழுப் பாடலைச் சொல்லவா வேண்டும்? என்று பெருமிதம் காட்டுகிறார்கள் ரசிகர்கள். டுவிட்டரில் ‘ஆளப்போகிறான் தமிழன்’ பாடல் பற்றிதான் ரசிகைகள் நிறைய விமர்சித்து வருகிறார்கள். 

BLOG COMMENTS POWERED BY DISQUS